மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக, அம்மாநில உள்துறை அமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இது தாமதமான நடவடிக்கை என குறிப்பிட்ட ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலம் 50 நாட்களாக பற்றி எரியும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என, விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி நாட்டிலேயே இல்லாத போது அனைத்துக் கட்சி கூட்டம் எதற்கு? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அனைத்துக் கட்சி கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை என, குறிப்பிட்டுள்ளார்.