#JUSTIN | மணிப்பூர் கலவரம் - 33 பேர் சுட்டுக்கொலை - முதலமைச்சர் பீரேன் சிங் வேதனை
- மணிப்பூர் கலவரம் - 33 பேர் சுட்டுக்கொலை மணிப்பூர் மாநிலத்தில் கலவரக்காரர்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 33 பேர் சுட்டுக் கொலை
- மணிப்பூர் முதலமைச்சர் பீரேன் சிங் தகவல் ஷேக்மாய், சுக்னு, கும்பி, பேயங், செரவ் ஆகிய இடங்களில் கலவரக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படைக்கும் இடையே தீவிர சண்டை ஏற்பட்டுள்ளது.
- மோதல் நடந்த இடங்களில் சாலைகளில் சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பதாக முதல்வர் பீரேன் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
- கலவரக்காரர்கள் எம்-16, ஏ.கே.-47 வகை துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
- துப்பாக்கிச் சண்டை ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேதான் நடக்கிறது, சமூகங்களுக்கு இடையே அல்ல. எனவே பொது மக்கள் அமைதி காக்கவும் ஒற்றுமையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்," என்று முதல்வர் கூறினார். ஹெலிகாப்டர் மூலம் வான்வழி கண்காணித்துநடைபெற்று வருகிறது