கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, பேருந்தில், பயணியிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் திருட முயன்றதாகக் கூறி, நடத்துநர் மற்றும் ஓட்டுநர், ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. குளித்தலை பேருந்து நிலையம் வழியாக வந்த அரசுப் பேருந்தில், 10 ஆயிரம் ரூபாய் மாயமானதாக பயணி ஒருவர் கூச்சலிடவே, அருகில் இருந்த நபரின் பையில் அந்தப் பணம் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய நபரை, நடத்துநர் மற்றும் ஓட்டுநர் தாக்கியுள்ளனர். விபத்தில் கால் இழந்த நபர், பணத்தை தான் திருடவில்லை எனக் கூறியும், விசாரணைக்கு போலீசார் அந்த நபரை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.