கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்காகக் காத்திருக்கும் சித்தராமையாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே இனிப்பை ஊட்டுவது போல் ஏமாற்றி விளையாடிய சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது.
சட்டமன்ற தேர்தல் வெற்றியை மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் டி கே சிவகுமார், சித்தராமையா உள்ளிட்டோர் கட்சியினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேடையில் இருந்த ஒவ்வொருவருக்கும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இனிப்பை ஊட்டினார். சித்தராமையாவுக்கு ஊட்டும்போது மட்டும் 2 முறை வாய் அருகே கொண்டு சென்று ஊட்டாமல் கையை எடுத்துக் கொண்டு மீண்டும் ஊட்டி சிறு பிள்ளையைப் போல் விளையாடினார் கார்கே... தொடர்ந்து டி.கே.சிவகுமாருக்கு விளையாட்டு காட்டாமல் இனிப்பூட்டி மகிழ்ந்தார். அடுத்த முதல்வர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வெற்றிக் கொண்டாட்ட மேடையில் நடந்த இச்சம்பவம் மேலும் சுவாரஸ்யம் கூட்டியுள்ளது.