ரூ.25 லட்சம் இழப்பீடு விவகாரம்..! காரால் நொந்த எம்.எல்.ஏ. - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன்25 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கு தொடர்பாக தனியார் கார் நிறுவனம் பதிலளிக்க மதுரை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கப்பலூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் 23.39 லட்சம் ரூபாய்க்கு தான் வாங்கிய கார் அடிக்கடி பழுதாகி வருவதாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்பிற்கு கார் விற்பனை நிறுவனம் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று செந்தில்நாதன் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த மதுரை நுகர்வோர் நீதிமன்றம், மனுவிற்கு தனியார் கார் நிறுவன பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.20க்கு தள்ளி வைத்தது.