மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டங்கள் பற்றிய அலுவல் ஆய்வு கூட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பன்னாட்டு வங்கியிடம் இருந்து ஆயிரத்து 900 கோடி ரூபாய் கேட்டிருப்பதாகவும், அதற்கான நிதி, மத்திய அரசின் அனுமதி பெற்று பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.