அரச மரத்திற்கு ரூ.64 லட்சம் செலவு... 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவல்... எதற்கு தெரியுமா?

Update: 2023-03-28 02:38 GMT
  • இரண்டாயிரத்து 500 வருடங்களுக்கு முன்பு, வட இந்தியாவில் ஒரு மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதாக கருதப்படுகிறது.
  • அசோக சக்ரவர்த்தி, அந்த மரத்தின் கிளை ஒன்றை இலங்கையின் அனுராதபுர மன்னருக்கு பரிசாக அனுப்பி, அங்கு அதை நடச் செய்தார்.
  • 2012இல் இந்தியா வந்த அன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அனுராதபுரத்தில் உள்ள மரத்தின் கிளை ஒன்றை தன்னுடன் எடுத்து வந்தார்.
  • அதை மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சீ ஸ்துபா அருகே, அன்றைய மத்திய பிரதேச முதல்வரின் முன்னிலையில் நட்டார்.
  • அதற்கு மத்திய பிரதேச அரசு, ஆயுத காவல் படையின் பாதுகாப்பை அளித்து பராமரித்து வருகிறது.
  • இதுவரை சுமார் 64 லட்சம் ரூபாய் பாதுகாப்பிற்கும், நீர் பாய்ச்சவும் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
  • இரும்பு வேலி பாதுகாப்பு வேலிக்குள் உள்ள இந்த மரத்திற்கு, தீயணைக்கும் எஞ்ஞின் மூலம் நீர் பாய்ச்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்