"ரஜினிக்கு அன்றே அறிவுரை கூறினேன்" - முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

Update: 2023-03-12 02:58 GMT
  • ரஜினியை அரசியலுக்கு வரவேண்டாம் என தான் அறிவுரை கூறியதாக, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்
  • சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது.
  • இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • அப்போது விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, குருமூர்த்தி ஒருநாள் தன்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்று தெரிவித்ததாக கூறினார்.
  • அப்போது, அரசியலுக்கு வந்தால் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்றும், எனவே அரசியலுக்கு வர வேண்டாம் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்
  • . ஆனால், அரசியலுக்கு வருவதாக தெரிவித்து விட்டதாகவும், தற்போது திடீரென பின்வாங்குவது எப்படி என்று ரஜினி கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்