இன்சூரன்ஸ் இல்லாத Audi A4... சொய்ங்-னு வந்த நாம் தமிழர் வேட்பாளர்..! ரிட்டர்னில் நடந்த ட்விஸ்ட்
சென்னை அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் இடம், தமிழ்ச்செல்வி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு திறந்த வாகனத்தில் வந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, மற்ற வேட்பாளர்களிடமும் இதுபோன்று கேளுங்கள் என்று அவர் பதில் அளித்தார். தமிழ்ச்செல்வி வந்த வாகனத்தின் இன்சூரன்ஸ் காலாவதியாகி இருப்பது குறித்து கேட்டதற்கு, அதுபற்றி தனது கவனத்திற்கு வரவில்லை என்றும், மக்களின் பார்வைக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே திறந்வெளி வாகனத்தில் வந்ததாகவும் அவர் கூறினார். பின்னர், திரும்பிச் செல்லும்போது, வேறு ஒரு வாகனத்தில் தமிழ்செல்வி திரும்பிச் சென்றார்.