தர்காவில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் - இனம் என பிரிந்தது போதும்.. மதம் என பிரிந்தது போதும்..
அவிநாசி அருகே மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கானூரில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்காவில் கார்த்திகை விழாவை ஒட்டி தீபம் ஏற்றப்பட்டது. வழக்கம் போல் தர்காவுக்கு வழிபட வந்த பெண்கள் கார்த்திகை தீப விளக்குகளை ஏற்றினர்.
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக தீபம் ஏற்றப்பட்டதாக கூறும் அப்பகுதியினர், சாதி மத பேதமின்றி அனைவரும் வழிபடுவதாக கூறி நெகிழ்ந்தனர்.