பாத்திரம் கழுவிய தண்ணீரால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்.தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.இவரது தாயும், தங்கையும் வீட்டு வாசலில் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் வெளியேறும் கழிவு நீர் அருகில் இருந்த ஓட்டுநரான சோனையின் வீட்டு வாசலில் தேங்கியுள்ளது. இது தொடர்பாக சோனை பலமுறை கூறியிருந்ததால் ஜெயகுமாருக்கும், சோனைக்கும் வார்த்தை மோதல் நிலவி வந்துள்ளது.அதேபோல சம்பவம் நடந்த அன்றும் சோனை, ஜெயக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறவே ஆத்திரம் அடைந்த சோனை வீட்டிலிருந்த கத்தியால் ஜெயக்குமாரை சராமாரியாக குத்தவே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சோனையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.