தேனியில் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்த சமூக ஆர்வலர் நந்தினி மற்றும் அவரது சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனாவுடன் இணைந்து, அங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில், மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தகவல் அறிந்து அங்கு வந்த பாஜகவினர் அவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து, நந்தினி, நிரஞ்சனா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.