லாலு பிரசாத் யாதவுக்கு, இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவரது மகளான ரோஹிணி ஆச்சார்யா ஒரு சிறுநீரகத்தை வழங்க முன்வந்த நிலையில் அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
சிங்கப்பூரில் அமைந்துள்ள மருத்துவமனையில், இந்த அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.