22 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரி - தெப்பம் விட்டு வழிபாடு நடத்திய மக்கள் | Krishnagiri
ஓசூர் அருகே 22 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரியில் பொதுமக்கள் தெப்பம் விட்டு வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்துமாரணப்பள்ளி கிராமத்தில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது.
இது கனமழை காரணமாக 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ள நிலையில், மேளதாளங்கள் முழங்க கும்ப கலசங்களை தலைமேல் சுமந்து வந்த பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஏற்றி வழிபாடு நடத்தினர்.