தொழிலாளர் நலத்துறை மசோதா - தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை

Update: 2023-04-22 17:02 GMT

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை மசோதா குறித்து, அமைச்சர்கள் முன்னிலையில் தொழிற்சங்கங்களுடன், வரும் 24ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதன் முக்கிய அம்சங்கள், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோர் விரிவாக விளக்கம் அளித்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துகளைத் தெரிவித்து வருவதால், வரும் திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்