குமரி திரும்பிய மனைவி, குழந்தைகள்ஓமனில் சிக்கி தவிக்கும் இளைஞர்... கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ
கன்னியாகுமரியை சேர்ந்தவர் சுரேஷ். இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓமன் நாட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கொரோனா பெருந்தொற்றால் வேலையை இழந்த இவர், 19 ஆண்டுகளாக பணி செய்த நிறுவனத்தில் தனக்கான தொகையினை கேட்டுள்ளார். இது தொடர்பான பிரச்சினையில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கருதி நாடு திரும்ப முயன்ற நிலையில், அந்த நிறுவனத்தின் வேறொரு வழக்கால், சுரேஷ் நாடு திரும்ப, ஓமன் நாட்டு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, சுரேஷின் மனைவி பிரேமி மற்றும் குழந்தைகள் மட்டும் கன்னியாகுமரி திரும்பி உள்ளார். இந்நிலையில், ஓமனில் சிக்கி தவித்து வரும் சுரேஷ், தன்னை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிற்கு வேண்டுகோள் வைத்துளார்