ஊரை விட்டு ஒதுக்கி ஒதுக்கியதாக புகார் - ஆதார், ரேஷன் அட்டைகளை தாசில்தாரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கட்டப் பஞ்சாயத்து மூலம், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக ஒரு குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திப்பம்பட்டி கிராமத்தில் கண்மணி-குமார் தம்பதியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குமார், வெல்டிங் மிஷின் வைத்துக் கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கவுன்சிலர் குமார் கட்டப்பஞ்சாயத்து செய்து, குமாரின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காததால், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவைகளை வட்டாட்சியரிடம் குமார் குடும்பத்துடன் சென்று ஒப்படைத்தார்.