கிருஷ்ணகிரி ஆணவக் கொலை சம்பவம் - நேரில் ஆஜரான மாவட்ட கலெக்டர்..!

Update: 2023-04-21 02:55 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்கேறிய ஆணவக்கொலை குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகினர்..கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகனை தந்தையே ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்தான விசாரணையை தொடங்கியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், ஆணைய துணைத் தலைவர் அருண் ஹேல்டர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் நேரில் ஆஜராகினர்.

Tags:    

மேலும் செய்திகள்