சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுப்பு, தட்டிக்கேட்ட உரிமையாளர்களுக்கு கத்தி குத்து..

Update: 2022-12-26 02:59 GMT

கிருஷ்ணகிரி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட தள்ளுவண்டி கடை உரிமையாளர்களை, கத்தியால் தாக்கிய சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தூர் சின்னாறு ஏரிக்கரையில் உள்ள தள்ளுவண்டி கடையில், சாதிக்பாஷா என்பவரும், அவரது சகோதரரும் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்துள்ளனர். இதனையடுத்து ஏற்பட்ட கைகலப்பில் சாதிக்பாஷாவின் சகோதரர், கடையின் உரிமையாளர்களான ரம்ஜான் மற்றும் இம்ரானை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சாதிக்பாஷாவையும், அவரது சகோதரனையும் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்