கொட நாடு கொலை - கொள்ளை வழக்கு - முக்கிய குற்றவாளிகள் 10 பேர் இன்று ஆஜர்
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நாளை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
- கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து முன்னாள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உட்பட 48 பேரிடம் விசாரிக்கப்பட்டது.
- செல்போன் தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விசாரணைக்காக கால அவகாசம் கேட்கப்பட்டது.
- இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணையின்போது கடந்த ஒரு மாதத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- செல்போன் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை பற்றியும், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க உள்ளனர்.
- இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, தீபு, உள்ளிட்ட 10 பேரும் ஆஜராக உள்ளனர்.