ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி 7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
வடகொரியா சமீப காலமாக தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.
மேலும், வடகொரியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்தால், அதே அணு ஆயுதங்களை வைத்து தக்க பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாகவே எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உட்பட சர்வதேச சமூகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி 7 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.