"மாந்திரீகம், சூனியம்.." - "தடை சட்டம் கொண்டு வராதது ஏன்?" கேரள அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

Update: 2023-02-16 03:13 GMT
  • மாந்திரீகம், சூனியம் உள்ளிட்டவைகளுக்கு எதிரான தடை சட்டம் கொண்டு வருவதில் தாமதம் ஏன் என கேரள அரசுக்கு, அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
  • மனு மீதான விசாரணையில், மூடநம்பிக்கை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், பொது தண்டனைச் சட்டத்தில் மூடநம்பிக்கையை தடைசெய்வதற்கோ அல்லது வேறுவிதமாகக் கையாள்வதற்கோ போதுமான விதிகள் இல்லை என்றும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மூட நம்பிகைகளுக்கு எதிராக விதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
  • நரபலி மற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள், மாந்திரீகம் போன்றவை சட்டவிரோதமானது என்றும், மாநிலத்தில் செயல்படும் மாந்திரீக மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டது.
  • மேலும், மூடநம்பிக்கைகளை சித்தரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்