ரெஹானா பாத்திமா அரை நிர்வாண வீடியோ வழக்கில் கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Update: 2023-06-06 03:38 GMT

ரெஹானா பாத்திமாவின் அரை நிர்வாண வீடியோ தொடர்பான வழக்கில், நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா, கடந்த 2020-ம் ஆண்டு, தனது அரை நிர்வாண உடலில், தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு யூடியூப் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ 'பாடி அண்டு பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த‌து. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ஒரு தாயின் மேல் உடம்பில், சொந்த குழந்தையால், கலை படைப்பிற்காக வண்ணம் தீட்டுவது பாலியல் செயலை தூண்டுவது கிடையாது என தெரிவித்த‌து. கலையை வெளிப்படுத்தும் இந்த செயலில், குழந்தையை பாலியல் செயலை தூண்ட பயன்படுத்துகின்றனர் என கூறுவது இரக்கமற்றது என்றும், அந்த வீடியோவில் பாலியல் சார்ந்த எந்த விசயங்களும் இல்லை என்றும் கூறியது. வீடியோவில் எவ்வித தவறும் காணப்படவில்லை என்பதால், வழக்கில் இருந்து ரெஹானா பாத்திமாவை விடுவிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்