அவசர சட்டங்களில் கையெழுத்திடாத கேரள ஆளுநர்.. செல்லாத அரசாணைகளை மாற்ற கூட்டத்தொடர்

Update: 2022-08-22 03:22 GMT

கேரளாவில் இன்று முதல் வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடக்க உள்ளது. கேரளாவில் லோக்ஆயுக்தா சட்டத் திருத்தம் உள்ளிட்ட 11 அவசரச் சட்டங்களில் ஆளுநர் முகம்மது ஆரிப் கான் கையொழுத்திடாததால், அந்த அரசாணை அனைத்தும் காலவதியானது. செல்லாத அரசாணைகளை மாற்றுவதற்கான மசோதாவை நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவதற்கு, கேரளா அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று முதல் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரில், லோக்ஆயுக்தா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்