நாட்டை உலுக்கிய கேரள படகு விபத்து: ஓட்டுநர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..! இறுகும் பிடி... சிக்கப்போகும் அதிகாரிகள்
கேரளாவில் 22 பேரை பலி கொண்ட தனூர் படகு விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி வி.கே.மோகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தனூர் படகு விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி வி.கே.மோகனன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து படகுகளையும் ஆய்வு செய்யவும், தனிப்படை அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனிடையே மனித உரிமை ஆணையம் தனூர் வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டது. இந்த சம்பவத்தில் அதிகாரிகளின் தவறு இருப்பதாகவும், விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும், குழந்தை உரிமை ஆணையமும் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையே படகு ஓட்டுநர் தினேசன் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவருக்கு படகு ஓட்ட ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.