கேரளா மாநிலம் தனூரில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் மீன்பிடி படகு, சுற்றுலா படகாக மாற்றியமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் நாசர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்களுக்கு ரிமாண்ட் செய்யப்பட்டார். மேலும் நாசர் தலைமறைவாக இருக்க உதவிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே விபத்துக்குள்ளான படகை ஓட்டிய தினேசனையும், ஊழியர் சஹாய்யையும் போலீசார் தேடி வருகின்றனர். படகை ஓட்டிய தினேசனுக்கு உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.