"கடத்தப்பட்டவர் வாக்களித்தாலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை"கரூர் தேர்தலில் டிவிஸ்ட்

Update: 2022-12-22 12:21 GMT

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவருகான தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு

7:4 என்ற விகிதத்தில் திமுகவிற்கும் அதிமுகவிற்குமான வாக்குகள் பதிவாகியுள்ளது ஆகவே மனுதாரர் வாக்களித்திருந்தாலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை - அரசு தரப்பு

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல் முடிவினை அறிவித்துக் கொள்ளலாம் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு

தேர்தலில் போட்டியிட்ட மனுதாரர் திருவிகா கடத்தல் சம்பந்தமான வழக்கினை திண்டுக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்யும்படி நீதிபதிகள் உத்தரவு

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதியின் அடிப்படையில் 19.12.2022 அன்று பிற்பகல் நடைபெற்றது.

தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சீலிட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும், தேர்தல் முடிவுகள் வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் மனுதாரர் திருவிக்காவை தேர்தல் நடத்தும் நேரத்திற்கு முன்னதாக மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்றனர். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு.

இச்சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் 19.12.2022 அன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பாக முறையீடு செய்து, தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரினர். அதற்கு நீதிபதிகள் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு 22 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அன்று பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், 7:4 என்ற விகிதத்தில் திமுகவிற்கும் அதிமுகவிற்குமான வாக்குகள் பதிவாகியுள்ளது ஆகவே மனுதாரர் வாக்களித்திருந்தாலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை எனவே நடந்து முடிந்த இந்த தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல் முடிவினை அறிவித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.

மேலும் தேர்தலில் போட்டியிட்ட மனுதாரர் திருவிகா கடத்தல் சம்பந்தமான வழக்கினை திண்டுக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்யும்படி உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்