கர்நாடகாவில் இந்து அமைப்பை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்

Update: 2022-10-25 11:11 GMT

கர்நாடகாவில் கொலை செய்யப்பட்ட இந்து அமைப்பை சேர்ந்த ஹர்ஷாவின் குடும்பத்தினரை துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் இந்து அமைப்பில் இருந்த ஹர்ஷா சில மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு ஹர்ஷாவின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட அப்பகுதியினரை கற்களை கொண்டு அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதில் காயமடைந்த பிரகாஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்