கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்... மிளகாய் பொடியை தூவியதால் ஆத்திரம்.. பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்திரவதை
- கன்னியாகுமரியில், கணவனை இழந்த பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து சித்திரவதை செய்த ஆட்டோ ஓட்டுநர்களில் மூன்று பேரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்
- . மேல்புறம் பகுதியை சேர்ந்த கலா என்ற பெண்ணிடம், சில ஆட்டோ ஓட்டுநர்கள் கிண்டல் செய்து வந்துள்ளனர்.
- இதனை பலமுறை கண்டித்தும் கேட்காத அவர்கள், கடந்த 9ம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
- அப்போது கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை தூவிய பெண்ணை, ஆட்டோ ஓட்டுநர்களான சசி, வினோத், விஜயகாந்த், திபின் மற்றும் அரவிந்த் ஆகியோர் மின் கம்பத்தில் கட்டிவைத்து சித்திரவதை செய்துள்ளனர்.