700 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலின் அவல நிலை...- பக்தர்கள் விடுத்த கோரிக்கை
- குமரி அருகே பராமரிப்பின்றி இருக்கும் மஹாதேவர் விஷ்ணு கோயிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர் பகுதியில் இந்துசமய அறநிலையத்துறை கீழ் இருக்கும் மஹாதேவர் விஷ்ணு கோயில் அமைந்துள்ளது.
- சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில், தற்போது பராமரிப்பின்றி காணப்படுவதாக ஊர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
- தினசரி நடபெற வேண்டிய பூஜைகள் கூட நடத்த முடியாத அவல நிலை நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
- 12 ஆண்டுகள் முன்பு அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைந்துள்ளது. தற்போது கோயிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.