இல்லாத வீட்டுக்கு வரியா..? - அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸ்... அதிர்ந்து போன குடும்பம்...
- கன்னியாகுமரி அருகே இல்லாத வீட்டிற்கு வரி செலுத்த அனுப்பப்பட்ட நோட்டீஸால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமாள்.
- இவரது வீடு கடந்த 2018-ஆம் ஆண்டு ஒக்கி புயலின் போது இடிந்து தரைமட்டமானது.
- இதனால், சுந்தரமாள் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
- தனது வீடு இருந்த இடத்தில் காய்கறிகளை வளர்த்து வரும் அவருக்கு, இந்த ஆண்டிற்கான வீட்டு வரியாக, ஆயிரத்து 382 ரூபாய் செலுத்த வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- இல்லாத வீட்டிற்கு எப்படி வரி செலுத்த முடியுமென குடும்பத்தினர் குழம்பி போய் உள்ளனர்.