காலத்தால் அழியாத கண்ணதாசன்...

Update: 2023-06-24 02:15 GMT

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த மறைந்த கவியரசு கண்ணதாசனின் பிறந்த தினம் இன்று... அவரைப் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு உங்களுக்காக...

பிறப்பு முதல் இறப்பு வரை இடைப்பட்ட காலத்தில் அத்தனைக்குமாய் முத்து முத்தாய் பாடல் படைத்தவர் தான் காரைக்குடி சிறுகூடல்பட்டி தந்த முத்தையா...

கம்பனையும் பாரதியையும் மானசீக குருவாய்க் கொண்டு இவர் வடித்த கவிதைகளைப் படிக்கையிலே குட்டையாய்க் குழம்பிய மனம் கூட தெளிந்த நீரோடையாய் மாறி விடும்...

பேசத் தெரிந்த மிருகம்-அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்)

ஆளானப்பட்ட ஆளையும் தொட்டிலைப் போல் ஆட்டுவிக்கும் ஆசை உண்டாக்கும் பாதிப்பின் ஆழத்தை ஆழ் மனதிற்கு உணர்த்தும் கண்ணதாசனின் பாடல் இதோ...

வார்த்தை கோர்த்து வரிகள் சேர்த்து பொங்கி வரும் காதலை சிப்பிக்குள் முத்தாய் காத்து வைத்தார் காதல்காரன் கண்ணதாசன்...

காதல் தோல்வியால் ரணமான இதயத்திற்கு மயிலிறகாய் வருடி ஆறுதல் தந்ததும் கண்ணதாசன் பாடல்கள் தான்...

வாழ்க்கையில் துன்பங்கள் வந்து போகும்...ஆனால் துன்பமே வாழ்க்கையான போதும், துவண்டு கிடந்த மனதிற்குத் தோள் கொடுப்பவர் கண்ணதாசன்...

கொஞ்சம் களைப்பாக இருந்தாலும் போதும், காதுகளுக்குள் தேனாய்ப் பாய்ந்து நெஞ்சமெல்லாம் இனிக்கச் செய்யும் வரிகள் கண்ணதாசனுடையது...

அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், ஆசை, துக்கம் என மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் பாடல் தர முடியுமென்றால் அது கண்ணதாசனால் மட்டுமே சாத்தியம்...

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து... வற்றாத கற்பனைக்கு சொந்தக்காரரான கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கேற்பவே அவர் என்றென்றும் நிரந்தனமாவர்...


Tags:    

மேலும் செய்திகள்