"எங்களையே செக் பண்றியா"... வட மாநில செக்யூரிட்டிகளை தாக்கிய இளைஞர்கள் - தீவிர விசாரணையில் போலீசார்
காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்பார்க் மிண்டாஸ் தொழிற்சாலைக்கு, அம்லு, பரத்,ஹரி ஆகியோர் சென்று விட்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது வட மாநில செக்யூரிட்டிகள் இருவர், அவர்களை சோதனை செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், செக்யூரிட்டிகளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அக்பர் ஷெரீப்பையும் அவர்கள் தாக்கி, அவரின் துப்பாக்கியை இரண்டாக உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த செக்யூரிட்டிகளும், முன்னாள் ராணுவ வீரரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.