போலீசாரிடமே ரூ. 40 கோடி மோசடி.. குடும்பமாக சேர்ந்து ஏமாற்றிய காவலர்கள் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்
- காஞ்சிபுரம் அருகே, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி, 40 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, போலீசார் இருவர் உள்பட அவர்களது குடும்பத்தினர் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஏனாத்தூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலர்களான சகாய பாரத், ஆரோக்கிய அருண் ஆகிய இரு சகோதரர்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்கள், போலீசாரிடம் 40 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
- இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட குற்றப் பிரிவு போலீசார், சகாய பாரத், ஆரோக்கிய அருண் உள்பட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.