"வேலைக்கு போனால் தான் செல்போன்"- அம்மா போட்ட கண்டிஷன்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

Update: 2023-02-27 05:15 GMT
  • காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அம்மா செல்போன் தர மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாவதியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், மூத்த மகள் ஜோதி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்
  • . கடந்த சில தினங்களாக ஜோதி வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததால், பிரபாவதி செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு வேலைக்கு சென்றால்தான் செல்போன் தருவேன் என்று மகளிடம் கூறியுள்ளார்.
  • இதனால் மனம் உடைந்த ஜோதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
  • தகவல் அறிந்த வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், ஜோதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்