சாலையில் அசுர வேகத்தில் வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து -- ஒருவர் உயிரிழப்பு
சாயல்குடி அருகே, அதிவேகமாக வந்த வேன் மோதி, இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஓரிவயல் கிராமத்தில், அசுர வேகத்தில் வந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சண்முக சுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து தொடர்பான, பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன