காமராஜரின் 121வது பிறந்தநாள்.. மும்பையில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் கொண்டாட்டம்

Update: 2023-07-16 01:40 GMT

பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மும்பையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மன்ற மும்பை செயலாளர் ராஜ்குமார், காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து, விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில், மன்ற நிர்வாக குழு இயக்குனர்களான பெனியல், சிவப்பு பாண்டியன், கணேசன், சுந்தர் ராஜ் , டேனியல், விஜய்குமார், ரூபன், செல்வன், விநாயகன் , கரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்