கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் - ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் குவிந்த 120 பேர் |
கனியாமூர் கலவரத்தில் , நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நபர்கள் , கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 22 வது நாளாக கையெழுத்திட ஒரே நேரத்தில் குவிந்ததால் , நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த ஜீலை மாதம் 17 ஆம் தேதி கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக , இதுவரை 371 பேர் கைது செய்யப்பட்டனர் . இதில் 120 பேர் , விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் , நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர். அவர்கள் அனைவரும் , நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நீதிபதி முன்பு தினமும் நேரில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது . 22 வது நாட்களாக சாரல் மழையை பொருட்படுத்தாமல் அவர்கள் கையெழுத்திட வந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் கூட்டமாக காட்சியளித்தது .