கள்ளக்குறிச்சி கலவரம் - தொடரும் கைது நடவடிக்கை

Update: 2022-08-24 01:50 GMT

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தின் போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேரும், ஸ்ரீமதி என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழுவின் லிங்க் பகிர்ந்ததாக திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த இருவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்