"கள்ளக்குறிச்சி சம்பவம்.. வேட்டையாடப்படுகிறார்கள்" - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் திட்டமிட்டு திசை திருப்பப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரிக்காமல், வன்முறைக்கு தொடர்பில்லாதவர்களை புலனாய்வுக்குழு வேட்டையாடுவதாக புகார் தெரிவித்தார்.
15 வயது சிறுவனின் வயதை 19 வயதாக மாற்றி சிறையில் அடைத்திருப்பதாகவும், சாதி பெயரை கேட்டு கைது செய்வதாகவும் குற்றம் சாட்டிய திருமாவளவன், ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 13ஆம் தேதி விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.