"நாங்க சாகுறத தவிர வேற வழி தெரியல" பொங்கல் கரும்புக்கு அதிகாரிகள் போட்ட நிபந்தனை.. நிர்கதியாக நிற்கும் விவசாயிகள்

Update: 2023-01-07 03:23 GMT

பொங்கல் பரிசு தொகுப்புக்காக வெட்டப்பட்ட செங்கரும்புகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 600 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்புகளை பொங்கல் தொகுப்புக்காக கொள்முதல் செய்யும் பணியை அரசு அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதற்கிடையே, கரும்பு 6 அடி நீளத்தில் திடமாக இருக்க வேண்டும் என்ற அரசின் நிபந்தனையைக் காண்பித்து, கரும்பு கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்