புதினுக்கு ஷாக் தந்த ஜஸ்டின் ட்ரூடோ

Update: 2023-04-12 03:05 GMT

உக்ரைனுக்கு புதிய இராணுவ உதவிகள் வழங்கியதோடு, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கனடா அரசு அறிவித்துள்ளது.

டொராண்டோவில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், கனடா பின்னர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்யாவுடனான போருக்கு உதவியாக உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை அனுப்புவோம் என்று அறிவித்தார். கனடாவில் இருந்து அதி நவீன துப்பாக்கிகள், மற்றும் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வெடிமருந்துகளை அனுப்புவோம் என உறுதி அளித்தார். இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், போராடவும் உதவும் என்று கூறினார். அதோடு, ரஷ்யாவை சேர்ந்த 14 தனியார் மற்றும் 34 நிறுவனங்களுக்கும் தடை விதிப்பதாக அறிவித்தார். ரஷ்ய நிதித் துறையுடன் தொடர்புடைய ஒன்பது நிறுவனங்களுக்கு கூடுதல் தடைகளைஅறிவிப்பதாகவும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்