கொலையில் முடிந்த கேலி, கிண்டல் - இளைஞரைக் குத்தி கொன்ற சக நண்பர்கள்

Update: 2023-03-20 15:18 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன்...

அதே பகுதியை சேர்ந்தவர்கள் தாஸ் மற்றும் மார்ட்டின்....

இவர்கள் மூவரும் நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில், திடீரென இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு உள்ளது.

அப்போது, குணசீலனை தாஸ் மற்றும் மார்ட்டின் இருவரும் கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் தாஸ் மற்றும் மார்ட்டினைத் தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

தொடர்ந்து குணசீலனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், தாஸ் மற்றும் மார்ட்டினைக் கைது செய்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நண்பர்களுக்குள் ஏற்பட்ட கேலி கிண்டல் காரணமாக கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்