போலீஸ்-கே டஃப் கொடுத்த நாய் ஜானி.. 48 மணி நேரம் தான்..போலீசார் வெளியிட்ட வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில், சிறுவன் கொலை வழக்கை 48 மணிநேரத்தில் கண்டுபிடிக்க உதவிய போலீஸ் நாய் ஜானி குறித்து, அம்மாநில காவல்துறை வீடியோ வெளியிட்டுள்ளது. காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த துர்வேஷ்குமார் என்ற 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு, அவனிடமிருந்த டிராக்டர் திருடப்பட்டது. அம்மாநில போலீசாரின் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை மோப்ப நாய், சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை கண்டு பிடித்தது. மேலும், 22 கிலோ மீட்டர் தூரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட டிராக்டரையும் கண்டுபிடித்தது. இதையடுத்து, குற்றச்செயலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மோப்ப நாய் ஜானியை பாராட்டும் வகையில், அம்மாநில காவல்துறை வீடியோ வெளியிட்டுள்ளது.