டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவுதினம்.. அதிமுகவினருக்கு ஓபிஎஸ் அழைப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் ஆறாம் ஆண்டு நினைவுநாளில், மெரினாவில் உள்ள நினைவிடம் நோக்கி நடைபெறும் ஊர்வலத்தில் ஆதரவாளர்கள் பங்கேற்குமாறு ஓபிஎஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-29 02:40 GMT

அதிமுகவின் தலைமைக் கழகம் என்ற பெயரில், ஓபிஎஸ் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயல‌லிதாவின் நினைவுநாளையொட்டி, சேப்பாக்கத்தில் இருந்து, மெரினாவில் உள்ள நினைவிடம் வரை ஊர்வலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தியதும், உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் ஜெயல‌லிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்