"ஜெயலலிதா மேடமும் நானும்..." - ஜெ. குறித்து த்ரிஷா சொன்ன சுவாரஸ்ய ரகசியம்...!
தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை முன்னிட்டு கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. கொடைக்கானலில் இதமான சூழல் நிலவியதால், அனைவரும் இயற்கையை ரசித்த வண்ணம் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே, நகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறையை ஒட்டி ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளதால், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் வனவிலங்குகள் மற்றும் வனங்களை பாதுகாக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது