"ஜமேசா முபின் கல்லூரி படிப்பு முதல் கார் வெடிப்பில் இறக்கும் முன்பு வரை" - துருவியெடுக்கும் போலீஸ்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, கல்லூரி மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்புவனம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் ஜீவசூர்யா, மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வெளியே சென்ற சூர்யா, முகத்தில் காயங்களுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கேட்டபோது, சூர்யா பதில் கூறாமல் சென்றுள்ளார். பின்னர் அறைக்கு சென்ற அவர், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, கல்லூரி மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.