"அட்சய திருதியை தினத்தில் நகை வாங்கினால் நல்லது..விலைதான் அதிகமாக உள்ளது"
அட்சய திருதியை தினத்தையொட்டி, சென்னையில் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர்.
சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் 'அட்சய திருதியை' பண்டிகையாகக் கொண்டப்படுகிறது. இந்த நாள் முதலீடு செய்யவும், புதிய பொருட்களை வாங்கவும் உகந்த நாளாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகை, இன்று காலை தொடங்கி நாளை காலை வரை, 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியையொட்டி பல்வேறு நகைக்கடைகள் கவர்ச்சிகர அறிவிப்புகளை அறிவித்து உள்ளன. இந்நிலையில், காலை முதலே நகைக் கடைகளில் ஏராளமானோர் நகைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும் இன்று நகை வாங்கினால் நல்லது என நகை வாங்கியவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.