2 மணி நேரமாக பெய்த கனமழை... லாரியின் மேல் விழுந்த மழை துளியால் திடீரென கிளம்பிய வெண் புகை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. கவரைப்பேட்டை, எளாவூர், மாதர்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
மழையின் போது, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் இருந்து, உருக்கப்பட்ட சூடான இரும்பு பார்களை லாரி ஒன்று ஏற்றிச்சென்றது. அதிக வெப்பமான இரும்பு பார்களின் மீது மழை நீர் பட்டதால், லாரியின் மேல் பகுதியில் இருந்து வெண் புகை வெளியானது.