போலி சாதி சான்று கொடுத்த விவகாரம்... ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் நோட்டீஸ்
போலி சாதி சான்று கொடுத்த விவகாரம்... ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் நோட்டீஸ்
வேலூர் மாவட்டம் தோளப்பள்ளியில் போலி சாதி சான்றிதழ் கொடுத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட, 9 மாவட்டங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 அக்டோபரில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அப்போது, கல்பனா சுரேஷ் என்பவர் போலி சாதி சான்றிதழ் கொடுத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவி கல்பனா சுரேஷ் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் உத்தரவின்படி, ஊராட்சி மன்ற தலைவி கல்பனா சுரேஷ் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தேர்தலின் போது, அவர் தாக்கல் செய்த போலி சாதி சான்று ரத்து செய்யப்படுவதாக அந்த நோட்டீஸில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.